Advertisement

Share On
District News

அ ம மு க மற்றும் மாற்று கட்சியில் இருந்து விலகி 300 மேற்பட்டோர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

Admin 6 months ago தூத்துக்குடி
300-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இருந்த மாணிக்கராஜா, கட்சி விரோத செயல்கள் காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பின்படி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று தூத்துக்குடி தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணிக்கராஜா முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்களும் மற்றும் மாற்றுக் கட்சி சேர்ந்தவர்களும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர்.

புதியதாக இணைந்தவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து அமைச்சர் கீதா ஜீவன் உற்சாகமாக வரவேற்றார். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்

போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

23 hours ago

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பிறந்தநாள்: தூத்துக்குடியில் சிவன், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

2 weeks ago

மாணவர்களுக்கு சமமான, தரமான கல்வி கிடைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்த முடிவு

1 month ago

7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: 4 மணி நேரத்தில் உறவுமுறைச் சான்று வழங்கிய வட்டாட்சியருக்கு பாராட்டு

1 month ago

விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: வித லீடர் அண்ணாமலை வலியுறுத்தல்

1 month ago

மகனை மண்வெட்டியால் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் –II தீர்ப்பு

6 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்