Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டில் இடிந்து விழும் நிலையில் பழைய தண்ணீர் தொட்டி: அகற்றப்படுமா?

Admin 22 hours ago தூத்துக்குடி
சிதிலமடைந்துள்ளதுடன், பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் காணப்படுகின்றன.
தூத்துக்குடி, அக். 2: 

தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு பகுதியில் பயன்பாடின்றி சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் காணப்படும் பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தற்போது பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. முறையான பராமரிப்பின்றி நீண்ட காலமாக காணப்படும் இந்தத் தொட்டியின் தூண்களின் அடிப்பகுதிகள் சிதிலமடைந்துள்ளதுடன், பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் காணப்படுகின்றன.

குறிப்பாக, தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் அரிப்பு ஏற்பட்டு, கம்பிகள் எலும்புக்கூடு போன்று வெளிப்பட்டுள்ளன. இதனால் தொட்டி மற்றும் அதன் கட்டுமானப் பகுதிகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் இந்தத் தொட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கூடுவதாகவும், மது அருந்துவதற்காக சிலர் அப்பகுதியை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அந்தப் பகுதி வழியாக செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், பகல் நேரங்களிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் சிதிலமடைந்த நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே விளையாடி வருகின்றனர். எதிர்பாராத வகையில் கட்டுமானப் பகுதி இடிந்து விழுந்தாலோ அல்லது கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பெயர்ந்து விழுந்தாலோ உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படும் முன்பாக, சங்கரப்பேரி ஹவுசிங் போர்டில் பயன்பாடின்றி சிதிலமடைந்துள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்தத் தொட்டியை இடித்து அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை - பொதுக்கூட்டத் திடலுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் வருகை

17 hours ago

தூத்துக்குடியில் பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

19 hours ago

அக்டோபர் 02 காந்தியடிகள் பிறந்தநாள் காமராஜர் நினைவு நாள் - தூத்துக்குடி வடக்கு திமுக சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

19 hours ago

தூத்துக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்க நகரக் கிளை - ஸ்ரீவை சுரேஷ் தேவர் தொடங்கி வைத்தார்.

2 days ago

முதலமைச்சர் விஜய் பிரசாரத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து மாற்றமா? – அண்ணாமலை கண்டனம்

3 days ago

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மத்திய மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

5 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்