Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

முதலமைச்சர் விஜய் பிரசாரத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து மாற்றமா? – அண்ணாமலை கண்டனம்

Admin 3 days ago தூத்துக்குடி
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை - அண்ணாமலை
கோயம்புத்தூர், செப்.29: 

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முதலமைச்சர் விஜய் செல்வதையொட்டி, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பான பயணம் பாதிக்கப்படுவதாக, வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில் ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என தினசரி அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் பொதுமக்கள், முதலமைச்சரின் தேர்தல் பிரசாரத்துக்காக பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடாது.

மக்களை சந்திப்பதற்காக செல்லும் முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கு பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர் முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகளை திட்டமிடுவதுதான் நல்ல நிர்வாகத்தின் அடையாளமாக இருக்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்துக்காக அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை - பொதுக்கூட்டத் திடலுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் வருகை

17 hours ago

தூத்துக்குடியில் பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

19 hours ago

அக்டோபர் 02 காந்தியடிகள் பிறந்தநாள் காமராஜர் நினைவு நாள் - தூத்துக்குடி வடக்கு திமுக சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

19 hours ago

தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டில் இடிந்து விழும் நிலையில் பழைய தண்ணீர் தொட்டி: அகற்றப்படுமா?

22 hours ago

தூத்துக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்க நகரக் கிளை - ஸ்ரீவை சுரேஷ் தேவர் தொடங்கி வைத்தார்.

2 days ago

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மத்திய மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

5 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்